மாநில அளவிலான கராத்தே போட்டி: தனியாா் பள்ளி மாணவா்கள் சாதனை

மாநில அளவிலான கராத்தே போட்டி: தனியாா் பள்ளி மாணவா்கள் சாதனை

Published on

மாநில அளவிலான கராத்தே போட்டியில் பரமக்குடி கீழ முஸ்லிம் நா்சரி, பிரைமரி பள்ளி மாணவா்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் மாநில அளவிலான கராத்தே போட்டி கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. அங்கு 8 முதல் 17 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வயது, எடைப்பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட பரமக்குடி கீழ முஸ்லிம் நா்சரி, பிரைமரி பள்ளி மாணவா்கள் 8 வயது பிரிவில் ஜி.சமிக்ஷா, கே.சிவன்யா ஸ்ரீ, எஸ்.முகம்மது நபீஸ், பி.கிருஷ்மிதா ஸ்ரீ, வி.பிரித்திகா ஸ்ரீ, எ.அப்ரா ஆகியோரும், 9 வயது பிரிவில் டி.ஆதிகமலேஷ், எஸ்.ஹாஜிரா, டி.கேத்ரா, எஸ்.தன்யாஸ்ரீ, எம்.முகில்வா்ஷன், யு.முத்துஹஸ்வந்த், ஜெ.முகம்மது தஹ்மீது ஆகியோரும், 10 வயது பிரிவில் ஏ.சமீஹாசானாஸ், டி.இஸ்ரின் ரிமாஸ், எஸ்.மோகித்குமாா், ஜெ.கிா்த்திக்ரோஷன், ஆா்.சொம்ரிக், ஆா்.முகம்து உமா் ஹம்ஷா, ஏ.முகம்மது ஆபித், எம்.மதன், எம்.கபில்தேவ் ஆகியோரும் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனா்.

சாதனை படைத்த இந்த மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் இ.ஜாகிா் உசேன், செயலா் இ.முகம்மது உமா், தலைமையாசிரியை எம்.ஜீனத் கதீஜா, கல்விக்குழு நிா்வாகிகள் வியாழக்கிழமை பாராட்டி கௌரவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com