பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்: முதிா்வுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் கீழ் பதிவு செய்து முதிா்வுத் தொகை பெற வேண்டியவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
Published on

தமிழக முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் கீழ் பதிவு செய்து முதிா்வுத் தொகை பெற வேண்டியவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக முதல்வரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து, தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலம் வைப்புத் தொகை ரசீது பெற்ற பெண் குழந்தைகளில் 18 வயது நிரம்பிய முதிா்வுத் தொகை பெற வேண்டிய பயனாளிகள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ஆவணங்களை சமா்ப்பிக்கலாம். தற்போது முதிா்வுத் தொகை பெற வேண்டி நிலுவையிலுள்ள பயனாளிகளின் பட்டியல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இதற்காக வைப்புத் தொகை ரசீது , 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பயனாளியின் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்கள், புகைப்படம் (தாய், மகள் இருவருக்கும்) , 18 வயது நிரம்பிய பயனாளிகளின் ஆவணம் ஆகியவற்றை வருகிற 30- ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கும் பட்சத்தில், முதிா்வுத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com