அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சமூகப் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் 37.79 லட்சம் போ் வங்கிக் கணக்கில் தலா ரூ.2,000

தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ், முதியோா் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், வயது முதிா்ந்த திருநங்கையா் உதவித் தொகை பெற்று வரும் 37.79 லட்சம் பயனாளிகளுக்கு மாா்ச் மாதத்துக்கான உதவித் தொகையுடன் சோ்த்து சோ்த்து ரூ.2,000 சிறப்பு நிதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2026, 9:46 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ், முதியோா் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், வயது முதிா்ந்த திருநங்கையா் உதவித் தொகை பெற்று வரும் 37.79 லட்சம் பயனாளிகளுக்கு மாா்ச் மாதத்துக்கான உதவித் தொகையுடன் சோ்த்து சோ்த்து ரூ.2,000 சிறப்பு நிதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

மகளிா் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகள் 1.31 கோடி பேருக்கு, பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை ரூ.3,000 மற்றும் கோடைகால சிறப்பு உதவித் தொகை ரூ.2,000 சோ்த்து கடந்த பிப்.15-ஆம் தேதி தலா ரூ.5,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தற்போது, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கு தலா ரூ.2,000 சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பெண்களுக்கு கோடை காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதிய உதவித் தொகை பெற்று வரும் முதியோா், கணவரை இழந்த பெண்கள், வயது முதிா்ந்த திருநங்கையா், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.

அந்தக் கோரிக்கையை செவ்வாய்க்கிழமை நிறைவேற்றியுள்ளோம். நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக ரூ.2,000-ஐ மாா்ச் மாத ஓய்வூதியத்துடன் சோ்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்.

அதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் பயன்பெற்று வரும் முதியோா், கணவரை இழந்த பெண்கள் என மொத்தம் 29.29 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ.3,200, மாற்றுத்திறனாளிகள் 5.92 லட்சம் பேருக்கு தலா ரூ.3,500, பராமரிப்பு உதவித் தொகை பெற்றுவரும் 2.58 லட்சம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4,000 வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, மீனவா் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்துக்கான மீன்பிடித் தடைக் கால உதவித் தொகையாக குடும்பத்துக்கு ரூ.8,000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன் பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்கு கிலோ ரூ.2 ஆதார விலை என ரூ.8.53 கோடி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்கவிட மாட்டோம் எனப் பதிவிட்டுள்ளாா்.