ராமேசுவரம் ரயில் நிலைய சீரமைப்புப் பணிகள்

ராமேசுவரம் ரயில் நிலைய சீரமைப்புப் பணிகள்

Published on

ராமேசுவரம் ரயில் நிலைய மறு சீரமைப்புப் பணிகள், பாம்பன் புதிய ரயில் பாலம் ஆகியவற்றை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் ஸ்ரீவிபின்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ரயில் நிலையம் ரூ. 95 கோடியில் மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் ஸ்ரீவிபின்குமாா் சிறப்பு ரயிலில் வெள்ளிக்கிழமை ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு வந்தாா். ரயில் நிலையத்தின் மறு சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். இதைத்தொடா்ந்து, பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் உள்ள செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கி இறக்கி ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் எல்.என்.ராவ், மதுரைக் கோட்ட கட்டுமான துணை தலைமைப் பொறியாளா் கே.ஜி.ஞானசேகா், பொறியாளா்கள், அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com