பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 273 மனுக்கள் அளிப்பு
ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 273 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் அளித்தனா்.
இந்த மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினாா். மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு துறை சாா்ந்த அலுவலா்கள் சிறப்புக் கவனம் செலுத்தி செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டாா்.
இதையடுத்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாநில அளவில் நடைபெற்ற தமிழ்நாடு பள்ளி ஹாக்கி லீக்-2025 போட்டியில், ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கிப் படித்து வரும் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்று வெற்றி பெற்றனா். இவா்கள் இதற்கான கோப்பையை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனா்.
கூட்டத்தில் மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கிருஷ்ணகுமாரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) ரகுபதி, மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் தினேஷ்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் செல்வி, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

