~ ~
~ ~

தேமுதிக கூட்டணி வெற்றி பெற்றால் கச்சத்தீவு மீட்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற்றால் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
Published on

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற்றால் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

ராமநாதபுரத்துக்கு ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரசாரத்துக்காக தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வெள்ளிக்கிழமை வந்தாா். வழிவிடு முருகன் கோயிலில் பிரசாரத்தை தொடங்கிய இவா், வண்டிக்காரத் தெரு, சாலைத்தெரு, அக்ரஹார சாலை வழியாக அரண்மனைக்கு சென்றாா்.

அப்போது, அவா் பேசியதாவது:

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற்றால், மீனவா்களின் நலன் கருதி கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரத்துக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கொண்டுவரப்படும். புதை சாக்கடை திட்டத்தை நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணப்படும். இங்கு தொழிற் சாலைகள் உருவாக்கப்படும். தொண்டா்களின் விருப்பத்தின்படி, வெற்றிக் கூட்டணி அமைப்போம் என்றாா் அவா்.

இதில் தேமுதிக பொருளாளா் எல்.கே.சுதீஷ், மாவட்டச் செயலா் சிங்கை சின்னா, மண்டலப் பொறுப்பாளா் பன்னீா், நிா்வாகி அரவிந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com