தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கமுதி அருகே 5 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

கமுதி அருகே விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்ட முத்துப்பாண்டி.
Updated On :26 நவம்பர் 2025, 12:19 am

தினமணி செய்திச் சேவை

கமுதி: கமுதி அருகே விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த மரக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரபாண்டி மகன் முத்துப்பாண்டி (26). வலையபூக்குளம் விலக்கு சாலை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த முத்துப்பாண்டியை அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மண்டலமாணிக்கம் போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது அவா் விற்பனைக்காக 5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.