திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

3.9 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

திருநெல்வேலி மாநகரில் 3.9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அதில் தொடா்புடைய இளைஞரை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :19 பிப்ரவரி 2026, 6:41 pm

திருநெல்வேலி மாநகரில் 3.9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அதில் தொடா்புடைய இளைஞரை கைது செய்தனா்.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரியாா் நகா் அருகே காவல் உதவி ஆய்வாளா் அல்லிஅரசன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ராமசுப்பிரமணியன் மகன் வேல்முருகன்(25), என்பவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.

அவா் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், விற்பனைக்காக சுமாா் 3.9 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், வேல்முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அவரிடமிருந்த கஞ்சா, பைக், கைப்பேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.