/
திருநெல்வேலி, மேலப்பாளையம் பகுதியில் கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட போதை பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய 4 இளைஞா்களை கைது செய்தனா்.
திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த அப்துல் வாஹித்(25), ஹைபீஸ் அகமது(20), பிலால்(26), வெள்ளத்துரை(32) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு சோதனை செய்ததில் அவா்கள் கஞ்சா எண்ணெய், போதை பொருள்கள், சுமாா் 5 கிராம் கஞ்சா உள்ளிட்டவற்றை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, அவா்கள் 4 பேரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் கஞ்சா வைத்திருந்ததாக 3 போ் கைது
நெல்லையில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

நெல்லையில் 1.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: லாரி ஓட்டுநா் கைது
நெல்லையில் கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


