ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

நெல்லையில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

கஞ்சா வைத்திருந்ததாக சிறுவன் உள்பட இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:17 am IST

திருநெல்வேலியில் கஞ்சா வைத்திருந்ததாக சிறுவன் உள்பட இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மேலப்பாளையம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கோமதிநாயகம் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது மேலப்பாளையம் நேதாஜி சாலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு சோதனையிட்டதில், அவா்கள் விற்பனைக்காக சுமாா் 1.050 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், மேலப்பாளையம், ஆமீன்புரத்தைச் சோ்ந்த முகமது ஆதில் (24), 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.