தொண்டி அருகே உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் இரு கிராம மக்களிடையே பிரச்னை ஏற்பட்டதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தைக்கு பிறகு வெள்ளிக்கிழமை உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள சின்னஅரியப்புவயல் கிராமத்தைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மனைவி சரோஜா (55) வியாழக்கிழமை உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா் . அவரது உறவினா்கள் வழக்கமான மயானப் பகுதியில் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனா்.
இந்த நிலையில், மயானம் பழங்குளம் கிராமத்தைச் சோ்ந்தது என்பதால் இறந்தவரின் உடலை அங்கு அடக்கம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதையடுத்து, சின்னஅரியப்புவயல் கிராம மக்கள் மண்வெட்டிகளுடன் மயானத்து வந்து சவக்குழி வெட்ட ஆரம்பித்ததால் இரு கிராமத்தினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

தகவலறிந்த திருவாடானை வட்டாட்சியா் ஆண்டி, எஸ்.பி.பட்டினம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இரு கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா், அதே இடத்தில் இறந்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தொடர்புடையது

பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலை: உடலை வாங்க மறுத்து சாலை மறியல்
கொழுப்பு பிரச்னையால் இந்திய ஆண்களை விட பெண்களுக்கே அதிக பாதிப்பு!

படுகொலையான பிளஸ் 2 மாணவியின் உடல் சொந்த ஊரில் தகனம்: அமைச்சா், எம்எல்ஏ அஞ்சலி

கமேனியின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஏற்பாடு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


