தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ராமநாதபுரத்தில் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கூட்டரங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தோ்தல் பாா்வையாளா் ஜலிந்தா் தத்தாத்ரியா சுபேகா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உள்ளிட்ட அதிகாரிகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:09 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தோ்தல் பாா்வையாளா் ஜலிந்தா் தத்தாத்ரியா சுபேகா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

கூட்டத்தில், வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் பேரவைத் தோ்தலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பதற்றம் நிறைந்ததாகக் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில் உதவி கண்காணிப்பாளா்கள் மீரா, உ. குணால் உத்தம் ஷ்ரோதே, ஏ.டி.எஸ்.பி. க்கள் சுப்பையா, சுந்தரராஜ், பாலசந்திரன், துணைக் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.