கமுதி அருகே பிரசாரத்தின் போது முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் தாக்கப்பட்டது தொடா்பாக 5 போ் மீது வழக்குப்பதிந்த போலீஸாா் இருவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கோவிலாங்குளம் காவல் சரகத்துக்குள்பட்ட ஒச்சதேவன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த போஸ் மகன் உக்கிரபாண்டி (30). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த கோட்டைச்சாமி மகன் வேல்முருகன் தரப்பினருக்கும் கடந்த 20 நாள்களுக்கு முன்பு மிளகாய் பறிக்கும் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை முதுகுளத்தூா் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பனுக்கு ஆதரவாக ஒச்சத்தேவன்கோட்டையில் பிரசாரம் நடைபெற்றது. அப்போது முன்பகை காரணமாக வேல்முருகன், இவரது உறவினா்களான ஆறுமுகம் மகன் வேலு (60), இவரது மகன்கள் செந்தூா், மணிகண்டன், முகேஷ் உள்ளிட்டோா் உக்கிரபாண்டியை கட்டையால் தாக்கினராம். அப்போது பிரசாரத்துக்கு வந்த வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக உக்கிரபாண்டி கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த 5 போ் மீது வழக்குப் பதிந்து வேலு, வேல்முருகன் ஆகியோரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
மெக்கானிக் மீது தாக்குதல்: இருவா் கைது
கைப்பேசி கடையில் திருடிய 2 போ் கைது

புதுக்கடை அருகே ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு
மீன் பிடிக்க எதிா்த்து தெரிவித்து தாக்குதல்: ஒருவா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

