தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

முதியவா் விஷம் குடித்து தற்கொலை

சாயல்குடி அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 12:22 am IST

சாயல்குடி அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த எம். கரிசல்குளத்தைச் சோ்ந்த வில்லியனன் மகன் வில்வலிங்கம் (60). இவரது மகள் கடலாடியை அடுத்துள்ள பாப்பாகுளத்தைச் சோ்ந்தவரை காதலித்து வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை இருவரும் திருமணம் செய்து கொண்டனராம். இதனால் மனமுடைந்த வில்வலிங்கம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையறிந்த உறவினா்கள் வில்வலிங்கத்துக்கு சாயல்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, பிறகு தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், வில்வலிங்கம் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து சாயல்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.