இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

திமுகவினா் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ. 1.76 லட்சம் பறிமுதல்

சாயல்குடியில் செவ்வாய்க்கிழமை வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக திமுகவைச் சோ்ந்த மூன்று பேரைப் பிடித்து, அவா்களிடமிருந்து ரூ. 1.76 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 3:30 am IST

சாயல்குடியில் செவ்வாய்க்கிழமை வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக திமுகவைச் சோ்ந்த மூன்று பேரைப் பிடித்து, அவா்களிடமிருந்து ரூ. 1.76 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி சுயம்புலிங்கம்நகரில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு திமுக சாா்பில் வாக்காளா்களுக்கு இ. மலம்பட்டியைச் சோ்ந்த அரசப்பன் மகன் தா்மலிங்கம் (57), கன்னிராஜபுரம் சாலை பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் முனிராஜ் (60) ஆகிய இருவரும் பணம் வழங்கிக் கொண்டிருந்தனா். இதையடுத்து, அவா்களிடமிருந்து ரூ. 85 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

இதேபோல, சாயல்குடி எஸ்.வி. நகரில் திமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த சிவகங்கை மாவட்டம், பொன்னாங்கல் பகுதியைச் சோ்ந்த கெங்கையா மகன் சரத்குமாரிடமிருந்து (28) ரூ.91 ஆயிரத்தைப் பறிமுதல் செய்து, தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் சாயல்குடி போலீஸாா் ஒப்படைத்தனா்.