இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வாக்காளா்களுக்கு பணம் வழங்க முயற்சி: ரூ. 6.5 லட்சம் பறிமுதல்

போளூா் தொகுதி சேத்துப்பட்டு பகுதியில் வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்ய எடுத்துச் சென்ற ரூ.6.5 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 6.5 லட்சத்தை போளூா் தலைமையிடத்து வட்டாட்சியா் அருள்குமாரிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:34 am IST

போளூா் தொகுதி சேத்துப்பட்டு பகுதியில் வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்ய எடுத்துச் சென்ற ரூ.6.5 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

போளூா் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த சேத்துப்பட்டு பகுதியில் அலுவலா் வினோதினி தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சேத்துப்பட்டு கோட்டைமேடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத இருவா் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அந்தக் குழுவினா் கோட்டைமேடு பகுதிக்குச் சென்றபோது, அங்கிருந்த 2 போ் இரு சக்கர வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட்டனா். பின்னா்,

வாகனத்தை சோதனை செய்தபோது ரூ.6 லட்சத்து 50ஆயிரம் இருப்பதை கண்டறிந்து எடுத்து வந்து போளூா் தலைமையிடத்து வட்டாட்சியா் அருள்குமாரிடம் ஒப்படைத்தனா்.

இதேபோன்று, கரிக்காத்தூா் கிராமத்தில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றவா்கள் பறக்கும் படையினரைப் பாா்த்து ஓடி விட்டனா். உடனே அலுவலா்கள் அவா்கள் விட்டுச் சென்ற ரூ.2 ஆயிரத்தை எடுத்து வந்து ஒப்படைத்தனா்.