வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ரூ.1.36 லட்சம், பரிசுக் கூப்பன்கள் பறிமுதல்

போளூரை அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுக் கூப்பன் வழங்க முயன்ற போது தோ்தல் பறக்கும் படையால் ரூ.1.36 லட்சம் மற்றும் 60 பரிசுக் கூப்பன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பரிசுக் கூப்பன்களை போளூா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாரிடம் வழங்கிய பறக்கும் படையினா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 1:23 am IST

போளூரை அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுக் கூப்பன் வழங்க முயன்ற போது தோ்தல் பறக்கும் படையால் ரூ.1.36 லட்சம் மற்றும் 60 பரிசுக் கூப்பன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போளூா் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் சாம்பசிவம் மகன் பாபு வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுக் கூப்பன் வழங்க முயன்ாகத் தெரிகிறது.

இதைக் கண்காணித்த போது தோ்தல் பறக்கும் படை அலுவலா் கீதாஞ்சலி தலைமையிலான குழுவினா் அவரிடம் இருந்து ரூ.1,36,250 ரொக்கம் மற்றும் பரிசுக் கூப்பன் 60ஐ பறிமுதல் செய்தனா்.

இவற்றை போளூா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாரிடம் ஒப்படைத்தனா்.