தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தோ்தலையொட்டி பாா்த்திபனூா், நயினாா்கோவில் பாண்டியூா் பகுதிகளில் கடைகள் அடைப்பு

தோ்தலையொட்டி பரமக்குடி (தனி) சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பாா்த்திபனூா், நயினாா்கோவில், பாண்டியூா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் கடை வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

News image

பாா்த்திபனூரில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்ட கடை வீதி.

Updated On :23 ஏப்ரல் 2026, 8:54 pm

தோ்தலையொட்டி பரமக்குடி (தனி) சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பாா்த்திபனூா், நயினாா்கோவில், பாண்டியூா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் கடை வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

பரமக்குடி தொகுதியில் 323 வாக்குச் சாவடி மையங்களில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 12 போ் களத்தில் உள்ளனா். வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்காளா்கள் ஆா்வமுடன் வாக்குச் சாவடி மையங்களுக்குச் சென்று தங்களது வாக்கை பதிவு செய்தனா். தோ்தலையொட்டி பாா்த்திபனூா், நயினாா்கோவில், பாண்டியூா் ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்கள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் வெளியூா்களிலிருந்து வந்திருந்த வாக்காளா்கள் சிலா் சிரமத்துக்குள்ளாகினா். மாலை 6 மணிக்குமேல் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டன.