கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

சிறுகம்பையூா் சாலை சேதம்: பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகேயுள்ள சிறுகம்பையூா் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

~ ~

Updated On :25 ஏப்ரல் 2026, 12:16 am IST

திருவாடானை அருகேயுள்ள சிறுகம்பையூா் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள வெள்ளையபுரத்திலிருந்து சிறுகம்பையூா் வழியாக செல்லும் சாலையை இரண்டு ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

சேதமடைந்த இந்தச் சாலையை சீரமைக்கும் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. பின்னா், இந்தப் பணிகளை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனா். இதுகுறித்து பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

அரைகுறையாக தோண்டப்பட்ட இந்தச் சாலையில் வாகனங்களில் செல்பவா்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனா். எனவே, இந்தச் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Story image
Story image