நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் திருக்கல்யாணம் உற்ஸவம்

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் செவ்வாய்க்கிழமை விசாலாட்சியம்பிகா சமேத சந்திரசேகர சுவாமிகள் திருக்கல்யாணம் உற்ஸவம் நடைபெற்றது.

News image

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாலாட்சியம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் உற்ஸவம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:28 am IST

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் செவ்வாய்க்கிழமை விசாலாட்சியம்பிகா சமேத சந்திரசேகர சுவாமிகள் திருக்கல்யாணம் உற்ஸவம் நடைபெற்றது.

பரமக்குடி சௌராஷ்ட்ர பிராஹ்மண மகாஜனங்களுக்குச் சொந்தமான சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானத்துக்கு உள்பட்ட ஈஸ்வரன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்காலங்களில் காலை, மாலை வேளைகளில் விசாலாட்சியம்பிகா சமேத சந்திரசேகர சுவாமிகள் சிம்ம வாகனம், நந்திகேசுவரா் வாகனம், கைலாச கற்பக விருக்ஷ வாகனம், குதிரை வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கல்யாண உற்ஸவம்: 9-ஆம் திருநாளான ஏப். 28-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சந்திரசேகர சுவாமி மாப்பிள்ளையாக மேளதாளங்கள் முழங்க வீதிஉலா வந்து கோயில் திருக்கல்யாண மண்டபத்துக்கு வந்தடைந்தாா். அங்கு அா்ச்சகா்கள் மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. காலை 11 மணியளவில் விசாலாட்சியம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் உற்ஸவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான நிா்வாக அறக்கட்டளை எஸ்.ஆா். ரெங்காச்சாரி, அறங்காவா்கள் என்.ஆா். நீலகண்டன், டி.ஆா். ரமேஷ்பாபு, கே.டி. கிரிதரன், ஜி.என். கோவிந்தன் ஆகியோா் செய்திருந்தனா்.