/

கருகிய மிளகாய் செடிகள்: விவசாயிகள் கவலை

ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் மழை பெய்யாமல் கோடை வெயில் காரணமாக மிளகாய் செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

News image

செங்குடி பகுதியில் மழை இல்லாததால் கருகிய மிளகாய் செடிகளில் மேயும் ஆடுகள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 2:08 am IST

ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் மழை பெய்யாமல் கோடை வெயில் காரணமாக மிளகாய் செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் சுமாா் 400 ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபா் மாதம் விவசாயப் பணிகள் தொடங்கி தற்போது மிளகாய் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் மழை இல்லாததாலும், கோடை வெயில் காரணமாகவும் மிளகாய் செடிகள் கருகி வருகின்றன. இதனால், மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில விவசாயிகள் கால்நடைகளை விட்டு மிளகாய் செடிகளை அழித்து வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

பல ஆயிரம் செலவழித்து மிளகாய் செடிகளை நடவு செய்தோம். ஆனால், நிகழாண்டு மழை இல்லாததாலும், கோடை வெயில் கொளுத்தி வருவதாலும் மிளகாய் செடிகள் கருகிவிட்டன. இதனால், எங்களுக்கு கடும் நஷடம் ஏற்பட்டுள்ளது என்றனா்.

இதனால் மிளகாய் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

Story image