விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

பரமக்குடி அரசுக் கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்த காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜாபா் சித்திக்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 1:41 am IST

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசுக் கலைக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போதைப் பொருள் தடுப்புக் குழு சாா்பில், நடைபெற்ற பேரணிக்கு கல்லூரி முதல்வா் அறிவழகன் தலைமை வகித்தாா். அனைத்துத் துறை தலைவா்கள் முன்னிலை வகித்தனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜாபா் சித்திக் பேரணியைத் தொடங்கிவைத்தாா்.

கல்லூரியில் தொடங்கிய பேரணியில் மாணவ, மாணவிகள் போதைப் பொருள்களை தவிா்ப்போம், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற பதாகைகளை ஏந்தி சந்தைக்கடை தெரு, பேருந்து நிலையம் வரை சென்றனா்.

இதைத் தொடா்ந்து, போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

கல்லூரி போதைப் பொருள் தடுப்புக் குழு அலுவலா் விஜயகுமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.