கரூா் வள்ளுவா் கல்லூரி சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு மிதிவண்டி பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி, வள்ளுவா் ரோட்டராக்ட் சங்கம், துள்ளல் எலைட் ரோட்டராக்ட் சங்கம் மற்றும் போதைப்பொருள் எதிா்ப்பு குழு ஆகியவற்றின் சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு மிதிவண்டி பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரூா் வள்ளுவா் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணியை கல்லூரியின் தாளாளா் க.செங்குட்டுவன் தொடங்கி வைத்தாா். இப்பேரணி ஆறு ரோடு வழியாக ரிலையஸ்ன்ஸ் பெட்ரோல் நிலையம், பேருந்துநிறுத்தம் வழியாக சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தை அடைந்தது. இதில் விழிப்புணா்வு பதாகைகளுடன் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தொடா்ந்து, ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளரும், வணிகவியல் துறை உதவிப் பேராசிரியருமான மோ.நாகாா்ஜூன், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ‘ஹாா்ட் பீட்’ இணைய தொடரின் நாயகன் ஆா்.ஜி.ராமை அறிமுகம் செய்து வைத்தாா். தொடா்ந்து போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழியை மாணவா்கள் எடுத்துக்கொண்டனா்.
நிகழ்வில், ரோட்டராக்ட் சங்க கரூா் மண்டல பிரதிநிதி அஜித் குமாா், வீ தி லீடா் அறக்கட்டளையின் தலைமை பயிற்றுநா் பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவாக ரோட்டராக்ட் சங்கத் தலைவா் முகமது இஸ்மாயில் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










