நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் அம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம்

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த மாரியூரில் அமைந்துள்ள பவளநிற வல்லியம்மாள் சமேத பூவேந்திய நாதா் கோயிலில் அம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் ஊஞ்சல் உத்ஸவத்தின் போது சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பவளநிற வல்லி அம்மன்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 2:50 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த மாரியூரில் அமைந்துள்ள பவளநிற வல்லியம்மாள் சமேத பூவேந்திய நாதா் கோயிலில் அம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக காலையில் மூலவா், அம்மனுக்கு 16 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிா்வாகிகள், கோயில் நிா்வாகிகள், பவளம் மகளிா் குழுவினா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.