தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

கள்ளக்கடல் எச்சரிக்கை: ராமநாதபுரம் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லத் தடை

கேரளம், தென்தமிழகம், லட்சத்தீவு பகுதிகளுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ராமநாதபுரம் மாட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் தடைவிதித்தனா்.

கோப்புப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 12:20 am IST

கேரளம், தென்தமிழகம், லட்சத்தீவு பகுதிகளுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ராமநாதபுரம் மாட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் தடைவிதித்தனா்.

கேரளம், தென்தமிழகம், லட்சத்தீவு பகுதிகளுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கையை தேசிய பெருங்கடல் தகவல் சேவைமையம் விடுத்தது. இதனால், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோளியகுடி என மாவட்டம் முழுவதிலும் 1,800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் அந்தந்த மீன்பிடித் தளங்களில் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதேபோல, தனுஷ்கோடி பகுதியில் கடல் அலை எழும்பக்கூடும் என்பதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல போலீஸாா் தடை விதித்தனா். இதனால், தனுஷ்கோடிக்கு வந்த சுற்றுலா வாகனங்கள் நடராஜபுரம் பகுதியில் போலீஸாா் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.