உலக ஸ்கேட்டிங் போட்டி: பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!ஆசிய பாரா விளையாட்டு: நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற நிஷாத் குமார்!மின்வாரியத்தில் 2,600 ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு! கூடுதலாக 2,400 பணியாளர்கள்! நிர்மல் குமார்ஆசிய பாரா விளையாட்டு: புதிய சாதனையுடன் முதல் தங்கம் வென்ற இந்தியா!7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!மின்வாரியத்தில் 2,600 ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு! கூடுதலாக 2,400 பணியாளர்கள்! நிர்மல் குமார்ஹைதராபாத் விமான நிலையத்தின் எக்ஸ் தள கணக்கு முடக்கம்! விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் கூடாது! தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்மதுராந்தகம் தொகுதிக்கு 11 புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர் விஜய்!புதுச்சேரி திமுகவை மறுசீரமைக்க குழு அமைப்பு மும்பையில் நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச் சூடு! 3 பேர் கைது அண்ணன் சீர் திட்டத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம்: அரசாணை வெளியீடு!அன்புமணிக்கு காலில் அறுவைச் சிகிச்சை: 2 வாரங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தல்!

ஆசிய பாரா விளையாட்டு: புதிய சாதனையுடன் முதல் தங்கம் வென்ற இந்தியா!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது குறித்து...

Mona Agarwal, Avani Lekhra

மோனா அகர்வால், அவானி லேகரா - படம் - எக்ஸ்

Updated On :

ஜப்பானில் நடைபெற்றுவரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை மோனா அகர்வால் திங்கள்கிழமை (அக். 19) வென்றுள்ளார்.

ஆசியப் போட்டிகள் நிறைவடைந்த பிறகு, அதன் பாரா போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகளுக்கான 5-ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்  ஜப்பானின் அயிச்சி நகோயாவில் நேற்று (அக். 18) தொடங்கின.

வரும் அக். 24-ஆம் தேதி நிறைவடையும் இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் SH1 போட்டியில் இந்திய வீராங்கனையான மோனா அகர்வால் 250 புள்ளிகள் குவித்து புதிய ஆசிய சாதனையுடன் தங்கத்தைக் கைப்பற்றினார்.

இதே போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான அவானி லேகரா 249.6 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

2023 ஹாங்சோ விளையாட்டுப் போட்டியில் 249.6 புள்ளிகளுடன் அவானி லேகரா படைத்திருந்த முந்தைய சாதனையை, தற்போது 250 புள்ளிகள் பெற்றதன் மூலம் மோனா அகர்வால் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Mona Agarwal on Monday (Oct. 19) won India's first gold medal at the 2026 Asian Para Games being held in Japan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.