தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி! கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு ஹாட்ரிக் பதக்கம்: தமிழக அரசின் ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையைப் பெறும் துளசிமதி முருகேசன்! வாழப்பாடி அருகே முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!

28-வது தங்கம்... ஆசிய பாரா விளையாட்டில் சாதனையை சமன்செய்த இந்தியா!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியக்குழுவினர் 28-ஆவது தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் மோனா அகர்வால் (நடுவில்).

Updated On :

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியக்குழுவினர் 28-ஆவது தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஜப்பானின் அய்ச்சி- நகோயாவில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் கடந்த அக்.18 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தத் தொடரில் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை துளசிமதி முருகேசன் மற்றும் மானசி ஜோஷி இருவரும் சீன இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இந்தியக் குழுவினருக்கு இது 28-ஆவது தங்கப் பதக்கமாக அமைந்தது. இதற்கு முன்னதாக, சீனாவின் ஹாங்சோவில் 2022 ஆம் ஆண்டு நடந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 28 தங்கப்பதக்கம் வென்றிருந்த சாதனையை இந்தியக் குழுவினர் சமன் செய்துள்ளனர்.

அப்போதைய தொடரில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் உள்பட 107 பதக்கங்களை இந்தியா குழுவினர் வென்றிருந்தனர்.

தற்போது நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்தியக்குழுவினர் இதுவரை 28 தங்கம், 34 வெள்ளி, 46 வெண்கலத்துடன் மொத்தமாக 108 பதக்கங்களை வென்றுள்ளனர். அத்துடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 4-ஆம் இடத்தில் நீடிக்கிறது.

Summary

ndia have equalled their all-time gold medal record at the Asian Para Games, with Thulasimathi Murugesan and Manasi Joshi winning the women’s doubles title to take the tally to 28 golds. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.