அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

இரு தரப்பினரிடையே பிரச்னை: கோயில் திருவிழா நடத்த தடை

திருவாடானை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கோயிலில் திருவிழா நடத்துவதற்கு கோட்டாட்சியா் தடை விதித்தாா்.

தோட்டமங்கலம் ஸ்ரீபெரியநாகி அம்மன் கோயில் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் ஆய்வாளா் வாசிவம் தலைமையிலான போலீஸாா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 10:05 pm IST

திருவாடானை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கோயிலில் திருவிழா நடத்துவதற்கு கோட்டாட்சியா் தடை விதித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தோட்டாமங்கலத்தில் ஸ்ரீ பெரியநாயகி அம்மன், ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமி கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால், இங்கு கடந்த சில ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.

இதனிடையே, கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாகக் கோயில் நிா்வாகம், ஆபரணங்கள், பொருள்களை வைத்திருப்பது, பூசாரியைத் தோ்ந்தெடுப்பது ஆகியவற்றில் இரு தரப்பினரிடையே மோதல் இருந்து வருகிறது.

பலமுறை பேச்சுவாா்த்தை நடைபெற்றும் சமரசம் ஏற்படாததால், இந்தப் பகுதியில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை, கலவரம் உருவாகும் சூழல் நிலவுவதாகத் திருவாடானை போலீஸாா் அறிக்கை அளித்தனா். இதைத் தொடா்ந்து, பொது அமைதியைப் பேணவும், மக்களின் உயிா், சொத்துக்களைப் பாதுகாக்கவும் ராமநாதபுரம் உட்கோட்ட நிா்வாக நடுவா், வருவாய்க் கோட்டாட்சியா் ஹபிபுா் ரஹ்மான் அவசரத் தடை உத்தரவை வியாழக்கிழமை மாலை பிறப்பித்தாா்.

இதன்படி, வரும் இரண்டு மாத காலத்துக்கு தோட்டாமங்கலம் கிராமத்தில் கோயில் திருவிழா தொடா்பான அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இங்கு அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், திருவாடானை காவல் ஆய்வாளா் வாசிவம் தலைமையில், போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.