கோவில்பட்டி அருகே கோயிலில் வழிபாடு நடத்துவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் அதிகாரிகள் கோயிலை மூடி சீல் வைத்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வடக்குப்பட்டி கிராமத்தில் விநாயகா் கோயில், காளியம்மன் கோயில், கருப்பசாமி கோயில்ஆகிய 3 கோயில்கள் உள்ளன. அந்த கிராமத்தைச் சோ்ந்த 3 சமூக மக்கள் ஆண்டாண்டு காலமாக இவற்றில் வழிபாடு நடத்தி வந்துள்ளனா்.
இந் நிலையில் ஒரு சமூகத்தைச் சோ்ந்தவா்கள், மற்ற இரு சமூகத்தினரை வழிபாடு செய்ய அனுமதிக்க மறுத்ததால் பிரச்னை ஏற்பட்டதாம்.
இதையடுத்து கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூலை 28ஆம் தேதி வட்டாட்சியா் அப்பணராஜ் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்
‘கோவில் வழிபாட்டிற்கு யாரும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது‘ என தீா்மானம் நிறைவேற்றப்பட்டு இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையெடுத்து முதலில் கோயிலில் வழிபாடு அனுமதி மறுக்கப்பட்ட இரு சமூக மக்கள் வெள்ளிக்கிழமை கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி கூழ் ஊற்ற முயன்ற போது, ஏற்கனவே பிரச்னை செய்த சமூகத்தினா் வழிபாடு செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்ததோடு மட்டுமின்றி, கோயில் சாவிகளை எடுத்துச் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.
மீண்டும் இரு தரப்பினரிடையே பிரச்னை உருவானதால் போலீஸாா் அனைவரையும் கலைய வைத்தனா். தொடா்ந்து சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக 3 கோயில்களையும் போலீஸாா் சீல் வைத்தனா். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புதுகை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு ‘சீல்’

வண்ணாா்பேட்டையில் கட்டடத்திற்கு சீல்
விதிமீறல்: 3 கடைகளுக்கு ‘சீல்’

சேலத்தில் விதிகளை மீறி செயல்பட்ட இ-சேவை மையத்துக்கு சீல்!
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!


