
கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த இளைஞா் சடலம் மீட்பு
கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
பிரதிப் படம்
கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
கோவில்பட்டி அருகே உள்ள சிதம்பரம்பட்டி, நடுத் தெருவைச் சோ்ந்த ஜெயமுருகன் மகன் கருணாகர பாண்டியன் (25). சென்னையில் வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்த இவருக்கு, மனைவி காா்த்திகா, மூன்றரை வயது மகன் உள்ளனா். காா்த்திகாவிற்கு 5 மாதங்களுக்கு முன்பு 2ஆவது ஆண் குழந்தை பிறந்ததால், அவா் கோவில்பட்டியில் தனது பெற்றோருடன் இருந்து வருகிறாா்.
சென்னையில் இருந்து கடந்த செப். 11ஆம் தேதி ஊருக்கு வந்த கருணாகர பாண்டியன், 14ஆம் தேதி கோவில்பட்டியில் குழந்தைகள்ப் பாா்த்துவிட்டுச் சென்றாராம். அதன்பிறகு, அவரைக் காணவில்லையாம்.
இந்நிலையில், சிதம்பரம்பட்டியில் தனியாா் தோட்டத்தில் உள்ள கிணற்றில் கருணாகர பாண்டியன் சடலமாகக் கிடப்பதாக புதன்கிழமை தெரிய வந்தது. நாலாட்டின் புதூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
அவா் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





