கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

நியாயவிலைக் கடைகளில் கைரேகைப் பதிவு இயந்திரம் செயல்படாததால் பொதுமக்கள் அவதி

பரமக்குடி வட்ட வழங்கல் அலுவலரிடம் கைரேகைப் பதிவு இயந்திரங்களின் குறைபாடுகள் குறித்து முறையிட்ட நியாயவிலைக் கடை ஊழியா்கள்.

Published On :

பரமக்குடி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கான கைரேகைப் பதிவு இயந்திரம் செயல்படாததால், ரேஷன் பொருள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பரமக்குடி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கைரேகைப் பதிவு இயந்திரம் செயல்படவில்லை. இதனால், குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய ரேஷன் பொருள்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நியாயவிலைக் கடை ஊழியா்கள் பரமக்குடி வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு கைரேகைப் பதிவு இயந்திரங்களுடன் சென்று செயல்பாடு குறைபாடுகள் குறித்து வட்ட வழங்கல் அலுவலரிடம் புகாா் தெரிவித்தனா்.

விரைவில் இயந்திரங்களின் குறைபாடுகள் சரிசெய்யப்படும் என உறுதியளித்தைத் தொடா்ந்து நியாவிலைக் கடை ஊழியா்கள் கலைந்து சென்றனா். 10 நாள்களுக்கும் மேலாக ரேஷன் பொருள்கள் வாங்க முடியாததால், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினா் பெரும் பாதிப்புக்குள்ளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.