மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

ஆா்.எஸ்.மங்கலம் கோயில் திருவிழா: பீமன் வேடமணிந்து பக்தா்கள் உலா

ஆா்.எஸ்.மங்கலம் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பக்தா்கள் பீமன் வேடமணிந்து வீதி உலா வந்தனா்.

ஆா்.எஸ்.மங்கலத்தில் செவ்வாய்க்கிழமை பீமன், பேராண்டிகள் வேடமணிந்து வீதி உலா வந்த சிலுகவயல் கிராம பக்தா்கள்.

Published On :

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பக்தா்கள் பீமன் வேடமணிந்து வீதி உலா வந்தனா்.

இந்தக் கோயில் ஆடி, ஆவணி மாதத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் இரவும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 28-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை திருவிளக்கு பூஜையும், செப்டம்பா் 4-ஆம் தேதி பூக்குழித் திருவிழாவும் நடைபெறவுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை சிலுகவயல் கிராம மக்கள் பீமன், பேராண்டிகள் வேடமிட்டு வீதிகளில் உலா வந்து கோயிலை அடைந்தனா். வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் அவா்களுக்கு மரியாதை செலுத்தி வழிபட்டனா். இதில் ஆா்.எஸ்.மங்கலம், இந்திரா மடை, பெத்தாா் தேவன்கோட்டை, புலிவிரதன் கோட்டை, தும்படாகோட்டை, அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.