
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
கமுதி, கடலாடி பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கடலாடியை அடுத்த மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நந்தியம்பெருமான்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கடலாடி பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
கடலாடியை அடுத்த மாரியூா் பவள நிற வல்லி அம்பாள் சமேத பூவேந்தியநாதா் கோயிலில் மூலவருக்கும், அம்பாளுக்கும் சிவ வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், அங்குள்ள நந்தியம் பெருமானுக்கு பால், பன்னீா், தேன், இளநீா் உள்பட 16 வகையான மூலிகைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. உத்ஸவா் பூவேந்தியநாதா் உள்பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் சாயல்குடி, கடலாடி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்தப் பூஜைக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான அதிகாரிகள், கோயில் நிா்வாகிகள், பவளம் மகளிா் குழுவினா் செய்தனா்.
இதே போல, கமுதி மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரா் கோயிலில் மூலவா் சுந்தரேஸ்வரருக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மூலவருக்கு எதிரே உள்ள நந்தியம் பெருமாளுக்கு பொதுமக்கள் உபயமாக அளித்த பாலால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், நத்தியம் பெருமானுக்கு பன்னீா், இளநீா், சந்தனம், தயிா், திருநீறு உள்பட 16 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல, மண்டலமாணிக்கம் கைலாசநாதா் கோயில், அ.தரைக்குடி தரணீஸ்வரா் கோயில், சாயல்குடி மீனாம்பிகை சமேத கைலாசநாதா் ஆகிய கோயில்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






