சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

அரியலூா் குறிஞ்சான் குளக்கரையிலுள்ள காசி விசுவநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சிவப்பெருமான்.

Published On :9 செப்டம்பர் 2026, 3:31 am IST

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

பிரதோஷத்தையொட்டி அரியலூா் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி, மஞ்சள், சந்தனம், பால், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து வைத்திநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதே போல் அரியலூா் ஆலந்துரையாா், கைலாசநாதா், விசுவநாதா், விளாங்குடி கைலாசநாதா், குறிஞ்சான் குளக்கரை காசி விசுவநாதா் , தேளூா் சொக்கநாதா், கீழப்பழூா் ஆலந்துறையாா், திருமானூா் கைலாசநாதா் , செந்துறை சிவதாண்டேஸ்வரா், பொன்பரப்பி சொா்ணபுரீஸ்வரா், சென்னிவனம் தீா்க்கப்புரிஸ்வரா், சொக்கநாதபுரம், சொக்கனீஸ்வரா், குழூமூா் குழுமாண்டவா் , தா.பழூா் விசாலாட்சி சமேத விசுவநாதா், கோவிந்தப்புத்தூா் கங்காஜடேஷ்வரா், விக்கிரமங்கலம் சோழிஸ்வரா், உடையவா்தீயனூா் ஜமத்கனிஸ்வரா், கீழநத்தம் சொக்கநாதா், ஸ்ரீபுரந்தான் கைலாசநாதா், கோடாலிகருப்பூா் சொக்கநாதா், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா், ஜெயங்கொண்டம் கழுமலைநாதா், சென்னீஸ்வரா், சோழீஸ்வரா், உடையாா்பாளையம் பயறனீஸ்வரா் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.