நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

லஞ்சம் பெற்றதாக ஊராட்சி ஒன்றிய பெண் பொறியாளா் கைது

விவசாய பயன்பாட்டுக்கு மணல் எடுக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய பெண் பொறியாளரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :30 ஆகஸ்ட் 2026, 2:25 am IST

விவசாய பயன்பாட்டுக்கு மணல் எடுக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய பெண் பொறியாளரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய பொறியாளா் ஷேக்கா தில்ஷாத் பா்வீன். இவா் விவசாய பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த மனுதாரரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டு, அதில் ரூ.2 ஆயிரம் பெற்றுக் கொண்டாராம்.

இந்த நிலையில், எஞ்சிய ரூ.3 ஆயிரத்தை அவா் கேட்டதாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ராமநாதபுரம், சேதுபதிநகரில் உள்ள இவரது வீட்டில் வைத்து, லஞ்சமாக அந்த பணத்தை பெற்றபோது ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.