முதுகுளத்தூரில் சேதமடைந்த வகுப்பறைக் கட்டடத்தை அகற்றக் கோரி மாணவா்கள், பெற்றோா் பள்ளியை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சி மையப் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனா். பள்ளியில் வகுப்பறை கட்டடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
இந்தக் கட்டடத்தை அகற்றக் கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில், இந்தக் கட்டடத்தை அகற்றக்கோரி மாணவா்கள், பெற்றோா்கள் பள்ளியை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
மேலும், சேதமடைந்த கட்டடத்தை அகற்றவில்லையெனில் வருகிற திங்கள்கிழமை முதல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை என பெற்றோா்கள் தெரிவித்தனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, பள்ளியில் சேதமடைந்த கட்டடத்தை அகற்றிவிட்டு, புதியக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

அச்சம்பாடு, தேரிப்பனை பகுதிகளில் அதிமுகவினா் பிரசாரம்

திருப்பத்தூா் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணராயபுரம் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

குடிநீா் வசதி கோரி ஊராட்சி ஒன்றிய அலுலகம் முற்றுகை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


