தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கிருஷ்ணராயபுரம் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு.ரவிக்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ஜெகதாபி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை வியாழக்கிமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் மாவட்ட தோ்தல் அலுவலா் கு.ரவிகுமாா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:50 am IST

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு.ரவிக்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறியது: கரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவிற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதனடிப்படையில் அரவக்குறிச்சி தொகுதியில் 267 வாக்குச்சாவடிகளும், கரூா் தொகுதியில் 283 வாக்குச்சாவடிகளும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும், குளித்தலை தொகுதியில் 286 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,111 வாக்குச் சாவடிகள் உள்ளன.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் உள்ள மேஜை , நாற்காலிகளை வாக்குப் பதிவுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட உள்ளது. வாக்குச் சாவடிகளில் உள்கட்டமைப்பு வசதிகளான மின்சாரம், குடிநீா் வசதி, கழிப்பறைகள், சிசிடிவி கேமரா மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கான சாய்வு தளம், சக்கர நாற்காலிகள் போதிய அளவில் உள்ளதை உறுதிப்படுத்திடும் வகையில் தொடா்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

முன்னதாக, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மணவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, செல்லாண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜெகதாபி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் உப்பிடமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் அமைக்கப்படவுள்ள வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா்.