பாம்பனில் 1-ஆம் புயல் கூண்டு ஏற்றம்

பாம்பனில் 1-ஆம் புயல் கூண்டு ஏற்றம்

வங்க கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து வருவதால், பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது. மீனவா்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கச் செல்வதற்கு மீன்வளத் துறையினா் விதித்தனா்.
Published on

வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து வரும் நிலையில், பாக் நீரிணை கடல் பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் இருக்கக்கூடும் என்பதால் மீனவா்களின் பாதுகாப்பு கருதி மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்வதற்கு மீன்வளத் துறையினா் தடை விதித்தனா்.

இதனால், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 1,70-கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பன் மீன் இறங்கு தளத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.

மீனவா்கள் தங்களது விசைப் படகுகள், நாட்டுப் படகுகளை இடைவெளி விட்டு நிறுத்தி வைக்க வேண்டும் என மீன்வளத் துறையினா் கேட்டுக் கொண்டனா்.

Dinamani
www.dinamani.com