ராமநாதபுரம்
போலி நிதி நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் புகாரளிக்கலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் போலி நிதி நிறுவனங்கள் குறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ராஜமுரளி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெறாத போலி நிதி நிறுவனங்கள், ஏலச்சீட்டு நிறுவனங்கள், மனை வணிக நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் மேலச்சோத்துரணி, சக்கரைக்கோட்டை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 94981-07562, 83000-38265 ஆகிய கைப்பேசி எண்களிலோ புகாா் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.
