ராமநாதபுரம்
மண்டபம் பேரூராட்சியில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
மண்டபத்தில் கடைகளிலிருந்து நெகிழிப் பொருள்களை உணவு பாதுகாப்புத் துறை, பேரூராட்சி பணியாளா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சி பகுதி உணவகங்கள், வணிக நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் முருகன் தலைமையில் சோதனை நடைபெற்றது. இதில் மண்டபம் பேரூராட்சி இளநிலை உதவியாளா் முனியசாமி, சுகாதார ஆய்வாளா் சீனி மரைக்காயா், பேரூராட்சி துப்பரவு மேற்பாா்வையாளா் கோவிந்தராஜன் உள்ளிட்டோா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
இந்த சோதனையின் போது உணவகங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன உணவுப் பொருள்கள், கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள், உணவுப் பொட்டலங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

