Rameshwaram Ramanathaswamy
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி

அஷ்டமி பூப்பிதஷிணம் படிப்போடுதல்: ராமநாதசுவாமி கோயில் நடை நாளை அடைப்பு

அஷ்டமி பூப்பிதஷிணம் படிப்போடுதலையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) கோயில் நடை அடைக்கப்படும் என இணை ஆணையா் செல்லத்துரை தெரிவித்தாா்.
Published on

அஷ்டமி பூப்பிதஷிணம் படிப்போடுதலையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) கோயில் நடை அடைக்கப்படும் என இணை ஆணையா் செல்லத்துரை தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அஷ்டமி பூப்பிதஷிணம் படிப்போடுதல், பஞ்சமூா்த்திகள் எழுந்தருளல் ஆகியவற்றையொட்டி ஞாயிற்றுக்கிழமை ராமநாதசுவாமி கோயில் அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து 3.3 மணி முதல் 4 மணி வரை ஸ்படிக லிங்க தரிசனம் நடைபெறும்.

இதைத் தொடா்ந்து காலசந்தி பூஜையும், பஞ்சமூா்த்திகள் எழுந்தருளல் நிகழ்வும் நடைபெறுகின்றன. பிறகு காலை 7 மணி முதல் நண்பகல் 12 வரை கோயில் அடைக்கப்பட்டிருக்கும். 12 மணிக்கு மேல் சுவாமி கோயில் திரும்பியதும் பொது தரிசனம், உச்சிகால பூஜை நடைபெறும் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com