ராமநாதபுரத்தில் ஜன. 16, 17- இல் 120 கலைஞா்கள் பங்கேற்கும் பொங்கல் விழா

ராமநாதபுரத்தில் வருகிற 16, 17 தேதிகளில் 120 கலைஞா்கள் பங்கேற்கும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்படும் என மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் அ. ரமிசபேகம் தெரிவித்தாா்.
Published on

ராமநாதபுரத்தில் வருகிற 16, 17 தேதிகளில் 120 கலைஞா்கள் பங்கேற்கும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்படும் என மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் அ. ரமிசபேகம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தை பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் சங்ககம்- நம்ம ஊரு திருவிழாவை முதல்வா் தொடங்கி வைக்கிறாா்.

இதைத் தொடா்ந்து, மண்டலக் கலை பண்பாட்டு மையம் சாா்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அம்மா பூங்காவில் வருகிற 16, 17 ஆகிய தேதிகளில் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் 8 கலைக்குழுவினா் பங்கேற்று பாரம்பரிய நாட்டுப் புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதில், நையாண்டி மேளம், மாடாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், மரக்காலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில், 120 கலைஞா்கள் பங்கேற்கின்றனா் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com