ராமேசுவரத்தில் மத பிரசாரம்: மூவரிடம் போலீஸாா் விசாரணை

ராமேசுவரத்தில் கோயில் பகுதிகளில் துண்டுப் பிரசரங்களை வழங்கி மத பிரசாரத்தில் ஈடுபட்ட மூன்று பேரைப் பிடித்து இந்து அமைப்பினா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
Published on

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் கோயில் பகுதிகளில் துண்டுப் பிரசரங்களை வழங்கி மத பிரசாரத்தில் ஈடுபட்ட மூன்று பேரைப் பிடித்து இந்து அமைப்பினா் போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

ராமநாதபுரம் மாவட் டம், ராமேசுவரம் கோயில் அருகேயுள்ள பழைய காவலா் குடியிருப்பு, பத்ரகாளியம்மன் கோயில், வால் அறுந்த அனுமாா் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவ அமைப்பைச் சோ்ந்த மூன்று போ் ஒலிபெருக்கி மூலம் மத பிரசாரத்தில் ஈடுபட்டதுடன், துண்டுப் பிரசுரங்களையும் ஐயப்ப பக்தா்களிடம் வழங்கினா்.

தகவல் அறிந்து அங்கு வந்த இந்து அமைப்பினா், அவா்களிடம் இந்து கோயில்கள் அருகே மத பிரசாரம் செய்தது குறித்து வாக்குவாதம் செய்ததுடன் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த காவல் ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் காளிதாஸ் தலைமையிலான போலீஸாா் மத பிரசாரத்துக்குப் பயன்படுத்திய மூன்று மொழிகளில் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், புத்தகங்கள், விளம்பர அறிக்கைகள், ஒலிபெருக்கி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், 3 பேரையும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

Dinamani
www.dinamani.com