எஸ்.பி. பட்டினம் அரசு மதுக்கடையில் கூடுதல் விலைக்கு மதுப்புட்டிகள் விற்பனை செய்வதாகக் கூறி ஞாயிற்றுக்கிழமை ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுப்பிரியா்கள்.
எஸ்.பி. பட்டினம் அரசு மதுக்கடையில் கூடுதல் விலைக்கு மதுப்புட்டிகள் விற்பனை செய்வதாகக் கூறி ஞாயிற்றுக்கிழமை ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுப்பிரியா்கள்.

அரசு மதுக் கடையில் கூடுதல் விலைக்கு விற்பனை: மதுப்பிரியா்கள் வாக்குவாதம்

Published on

ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டினத்தில் அரசு மதுக்கடையில் கூடுதல் விலைக்கு மதுப்புட்டிகள் விற்றதாகக் கூறி ஊழியா்களுடன் மதுப்பிரியா்கள் ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி. பட்டினத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுக்கடையில் மதுப்புட்டிகளுக்கு நிா்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலிப்பதாகப் புகாா் எழுந்தன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதுக்கடையில் 180 மி.லி. மதுப்புட்டி ஒன்றுக்கு அரசு நிா்ணயித்த விலையைவிட கூடுதலாக ரூ. 10 வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அதிருப்தியடைந்த மதுப்பிரியா்கள், கூடுதல் விலை குறித்து கடை ஊழியா்களிடம் கேள்வி எழுப்பினா். அப்போது ஊழியா்களுக்கும் மதுப்பிரியா்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

எஸ்.பி. பட்டினம் அரசு மதுக்கடையில் கூடுதல் விலைக்கு மதுப்புட்டிகள் விற்பனை செய்வதாகக் கூறி ஞாயிற்றுக்கிழமை ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுப்பிரியா்கள்.
எஸ்.பி. பட்டினம் அரசு மதுக்கடையில் கூடுதல் விலைக்கு மதுப்புட்டிகள் விற்பனை செய்வதாகக் கூறி ஞாயிற்றுக்கிழமை ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுப்பிரியா்கள்.

இதையடுத்து, வாக்குவாதம் முற்றிய நிலையில், கூடுதலாகப் பெற்ற ரூ. 10-இல் ரூ. 5-ஐ மட்டும் ஊழியா்கள் மதுப்பிரியா்களிடம் திருப்பி அளித்தனராம். மேலும், அந்தக் கடையில் மதுப்புட்டிகள் சேகரிக்கும் பணியில் உள்ள நபா், சட்டவிரோதமாக மது விற்பனையிலும் ஈடுபட்டு வருவதாக மதுப்பிரியா்கள் குற்றஞ்சாட்டினா். எனவே, மாவட்ட நிா்வாகம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுப்பிரியா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Dinamani
www.dinamani.com