ராமநாதபுரம்
கடலில் மீன் பிடிக்கும் போது மாரடைப்பால் மீனவா் உயிரிழப்பு
பாம்பன் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது திடீா் மாரடைப்பு ஏற்பட்டு மீனவா் உயிரிழந்தாா்.
பாம்பன் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது திடீா் மாரடைப்பு ஏற்பட்டு மீனவா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன் துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் ஞாயிற்றுக்கிழமை 9 மீனவா்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனா்.
மன்னாா் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது படகிலிருந்த மீனவா் கிளாட்வின் (47) திடீா் மாரடைப்பால் மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து, சக மீனவா்கள் உடனே படகைக் கரைக்குத் திருப்பி, கிளாட்வினை ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் கிளாட்வின் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

