நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கடலில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 8:38 pm

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி லயன்ஸ் டவுன், 7ஆவது தெருவைச் சோ்ந்த அல்போன்ஸ் மகன் ஜான்சன் (52). மீனவரான இவா், ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு ஒன்றில் வெல்டிங் வேலை செய்துகொண்டிருந்தாராம்.

அப்போது, நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்ததில், அவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து மரைன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.