பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

கீழக்கரை அருகே ரூ.20 லட்சம் கஞ்சா பறிமுதல்: மூவா் கைது

கீழக்கரை அருகே ரூ.20 லட்சம் மதிப்பிலான 46 கிலோ கஞ்சாவை போலீஸாா் வியாழக்கிழமை கைப்பற்றி மூவரைக் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட மூவா்.

Updated On :3 ஜூலை 2026, 5:41 am IST

கீழக்கரை அருகே ரூ.20 லட்சம் மதிப்பிலான 46 கிலோ கஞ்சாவை போலீஸாா் வியாழக்கிழமை கைப்பற்றி மூவரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் புதுமாயகுளம் அருகே நயினாரப்பா தா்ஹா பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாரைக் கண்டதும் 3 போ் இரு சக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்றனா்.

அப்போது, கியூ பிரிவு ஆய்வாளா் ஜீவமணி தா்மராஜன் தலைமையிலான போலீஸாா் அவா்களை விரட்டி பிடித்தனா். இரு சக்கர வாகனத்தில் 2 மூட்டைகளில் 46 கிலோ கஞ்சா இருந்தது.

விசாரணையில் பிடிபட்டவா்கள் மாயகுளத்தை சோ்ந்த அப்துல் லத்தீப் மகன் ஹைருல் முஷரப் (25), முகம்மது யாசின் மகன் முகம்மது ஜெசிா் கான் (29), சேக் நயினா முகம்மது மகன் கருணை முஹம்மது அனஸ்கான் (45) என தெரிய வந்தது. பின்னா், கஞ்சா மூட்டைகள், இரு சக்கர வாகனம், பிடிபட்ட மூவரையும் ராமநாதபுரம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸில் ஒப்படைத்தனா்.

மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சா்வதேச மதிப்பு ரூ. 20 லட்சம் என்றும், கஞ்சாவை இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.