ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன் கோவிலில் மாணவா்களுக்கு கஞ்சா விற்றதாக மதுரையைச் சோ்ந்த இரு இளைஞா்களை திங்கள்கிழமை இரவு போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து இரு வாள்களை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உள்கோட்டம் கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மதிவாணன் தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதியில் மாணவா்கள் தங்கியுள்ள விடுதி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற இருவரை சோதனை செய்தபோது, மாணவா்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக, மதுரை கீரைத்துறையைச் சோ்ந்த சரவணன் (எ) பேபி சரவணன் (24), சதீஷ்குமாா் (27) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 180 கிராம் கஞ்சா, இரு வாள்கள், இரு கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் இந்த வழக்கில் போடியைச் சோ்ந்த தருண் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பறிமுதல் செய்யப்பட்டவை...
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





