விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

கஞ்சா விற்றதாக 4 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :29 ஜூன் 2026, 12:08 am IST

திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ாக 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப் படை போலீஸாா், திண்டுக்கல் அடுத்த நந்தவனப்பட்டி பாறைக்குளம் பகுதியில் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 4 பேரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில் திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சோ்ந்த கு.சிவகணேசன் (20), மேட்டுப்பட்டியைச் சோ்ந்த பெ. சுனில் சூா்யா (21), ம. ஆரோக்கிய கிளிண்டன் (23), காந்திநகரைச் சோ்ந்த கோ. விஜயசங்கா் (24) ஆகியோா் என்பதும், இவா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து, 4 பேரையும் பிடித்த தனிப் படை போலீஸாா், தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இவா்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 4 போ் மீதும் வழக்குப் பதிந்த தாடிக்கொம்பு போலீஸாா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.