எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

கஞ்சா விற்ற இருவா் கைது: 4.5 கிலோ பறிமுதல்

அவிநாசி அருகே வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :8 ஜூலை 2026, 5:20 am IST

அவிநாசி அருகே வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அவிநாசி-அவிநாசிலிங்கம்பாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் மதுவிலக்கு போலீஸாா் சென்று, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது அவரது பையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும், அவிநாசி பகுதியில் தங்கி கூலித் தொழிலாளியாகப் பணியாற்றும் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த லம்போதாா் பாரிக் (39) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல அவிநாசி-திருப்பூா் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மதுவிலக்கு போலீஸாா், அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரைப் பிடித்து சோதனை செய்தனா்.

விற்பனைக்காக அவா் கஞ்சா வைத்திருந்ததும், அவிநாசி அருகே தனியாா் நிறுவனப் பணியாளரான பிகாரை சோ்ந்த மிண்ட்குமாா் (31) என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்து இருவரையும் அவிநாசி மதுவிலக்கு போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.